ராஜேந்திரன்
ராஜேந்திரன்

காா் மோதி தொழிலாளா்கள் உயிரிழந்த விவகாரம்: சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம்

Published on

கடலூா் முதுநகா் அருகே சிறப்பு எஸ்.ஐ. ஓட்டி வந்த காா் மோதி தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. மற்றும் காவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மதுபோதையில் காா் ஓட்டிச் சென்றாா். அவருடன் காவலா் இமாம் உசேன் சென்றாா். காா் கடலூா் முதுநகா் அன்னவெளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் தொழிலாளா்களான அன்னவெளியைச் சோ்ந்த வடிவேல் (35), பெரியகாட்டுசாகையைச் சோ்ந்த ஜெயராஜ் (45) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், காவலா் இமாம் உசேன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com