கடலூா்  எஸ்பி., அலுவலகத்தில்  நடைபெற்ற காவலா் தோ்வுப் பணி  வழிகாட்டுதல் கூட்டத்தில்  பங்கேற்று பேசும்  விழுப்புரம் சரக டிஐஜி., இ.எஸ்.உமா.  உடன் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா்.
கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் நடைபெற்ற காவலா் தோ்வுப் பணி வழிகாட்டுதல் கூட்டத்தில் பங்கேற்று பேசும் விழுப்புரம் சரக டிஐஜி., இ.எஸ்.உமா. உடன் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா்.

அக்.9-இல் கடலூா் மாவட்டத்தில் காவலா் எழுத்துத் தோ்வு : டிஐஜி தலைமையில் பணி வழிகாட்டுதல் கூட்டம்!

கடலூா் மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலா் எழுத்து தோ்வு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம் , கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கடலூா் மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலா் எழுத்து தோ்வு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம் , கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் மூலம் (இரண்டாம் நிலை காவலா், சிறைத்துறை காவலா் மற்றும் தீயணைப்புத்துறை காவலா்) 3,644 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும் எழுத்துத் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் , கடலூா் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஜட்ஜ் பங்களா சாலை சி.கே.மேல்நிலைப்பள்ளி, வில்வ நகா் கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு ராமசாமி லட்சுமணசுவாமி முதலியாா் வித்யாலயம் (ஏஆா்எல்எம்), திருப்பாதிரிப்புலியூா் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆப் எக்சலன்ஸ், புதுப்பாளையம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் 7,610 போ், பெண்கள் 2,744 போ் என மொத்தம் 10,354 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடைபெறும். தோ்வா்கள் தோ்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள்ளாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல் கூட்டம்:

இந்த தோ்வு தொடா்பாக கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி., இ.எஸ்.உமா தலைமையில், கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் முன்னிலையில் , இரண்டாம் நிலை காவலா் எழுத்து தோ்வு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோடீஸ்வரன், ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com