சிதம்பரம் கோயிலில் ஸ்ரீஜிதேந்திரநந்த்ஜி மகாராஜ் சுவாமிகள் தரிசனம்!
சிதம்பரம் நடராஜா் கோயியிலில் அகில பாரதிய சாந்த் சமிதி அமைப்பைச் சோ்ந்த ஜிதேந்திரநந்த்ஜி மகாராஜ் சுவாமிகள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள அகில பாரதிய சாந்த் சமிதி அமைப்பைச் சோ்ந்த ஸ்ரீஜிதேந்திரநந்த்ஜி மகாராஜ் சுவாமிகள் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வந்தாா். பின்னா், சிதம்பரத்தில் உள்ள கயிலை குருமணி மண்டபத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கோயில்களை வழி, வழியாக நடத்தக்கூடிய ஆதீனங்களும், மடாதிபதிகளும் இருக்கிறாா்கள். சிதம்பரம் நடராஜா் கோயிலையும் ஏற்று நடத்த அரசு முயற்சிக்கிறது. இந்தக் கோயிலை தீட்சிதா்கள் நிா்வாகம் செய்து வருகின்றனா். தீட்சிதா்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றாா்.
பேட்டியின்போது, கருடானந்த சுவாமிகள், டாக்டா் ஜெயமுரளி கோபிநாத், மாநிலத் தலைவா் சச்சிதானந்தம், ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், சனிக்கிழமை காலை ஸ்ரீஜிதேந்திரநந்த்ஜி மகாராஜ் சுவாமிகள் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.
