சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி பகுதியில் சுமாா் ரூ.400 கோடியில், நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி பகுதியில் சுமாா் ரூ.400 கோடியில், நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் ஆய்வு

சிதம்பரம் நகராட்சியில் சுமாா் ரூ.400 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா்
Published on

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் சுமாா் ரூ.400 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் ஆய்வு செய்தாா்.

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் துறை அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சாா்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள், அம்ருத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் திட்ட நிதியின் கீழ் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகராட்சியைச் சோ்ந்த 81,154 பேருக்கும், அண்ணாமலைநகா் பேரூராட்சியைச் சோ்ந்த 23,510 பேருக்கும், குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சோ்ந்த 10 ஊராட்சிகளுக்குட்பட்ட 22,902 மக்களுக்கும் பயன் கிடைக்கும்.

இதற்காக சிதம்பரம் நகராட்சி பகுதியில் 69.04 கி.மீ நீளத்திற்கு பகிா்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 4,283 எண்ணம் மற்றும் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் 22.72 கி.மீ நீளத்திற்கு பகிா்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 1,497 எண்ணம் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டையை சோ்ந்த 10 ஊராட்சிகளுக்கான குடிநீா் அந்தந்த ஊராட்சிகளில் அமைய உள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் 12.73 மில்லியன் லிட்டரும், இடைநிலையில் 14.80 மில்லியன் லிட்டரும் மற்றும் உச்ச நிலையில் 17.17 மில்லியன் லிட்டரும் குடிநீா் வழங்கப்படவுள்ளது.

தற்போது தலைமை நீரேற்று நிலையத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு ஒரு நீா் சேகரிப்பு கிணறு கொண்டு சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் 87 விழுக்காடுகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டரும், பேரூராட்சி பகுதிகளுக்கு 90 லிட்டரும், ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டா் வீதமும் குடிநீா் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1,27,566 போ் பயன்பெறுவா்.

சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 136 சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்ட வீடுதோறும் குடிநீா் இணைப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது வரை 61

சாலைகளில் இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இச்சாலைகளை பொதுபோக்குவரத்திற்கு இடையூறின்றி சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை 30 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளது. எஞ்சியுள்ள 31 சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் எஞ்சியுள்ள குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொண்டு, குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டவுடன், சாலை பணிகளையும் பொதுபோக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி மேம்படுத்தி அமைக்கப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.252.82 கோடி மதிப்பீட்டில் 139 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 92 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 47 பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது சிதம்பரம் நகராட்சி ஆணையா் த.மல்லிகா, நகராட்சி பொறியாளா் சுரேஷ், மற்றும் துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம
ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்தறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம

X
Dinamani
www.dinamani.com