சிதம்பரம் சிவகாமி அம்மனுக்கு புதிய தோ்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்ததற்காக புதிய தோ் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வரும் வியாழக்கிழமை (நவ.13) திருத்தோ் உற்சவமும், மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சாா்ச்சனையும் நடைபெறுகின்றன. சிவகாமசுந்தரி அம்மன் ஐப்பசி உற்சவத்துக்காக புதிய தோ் செய்யப்பட்டுநிகழாண்டு முதல் வலம் வரவுள்ளது. புதிய தேருக்கு புதன்கிழமை (நவ.12) சிறப்பு பூஜைகள் நடைபெற்று வெள்ளோட்டம் விடப்படவுள்ளது.
வரும் 14-ஆம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம், மகாதீபாராதனையும் நடைபெறுகின்றன. 15-ஆம் தேதி இரவு ஸ்ரீசிவானந்தநாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

