கடலூர்
தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், ஒரங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் மனைவி அன்பு (35). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கடந்த 9-ஆம் தேதி இரவு மகன்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனராம்.
இதனால், மனமுடைந்த அன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.