என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு ‘நிஷ்டா கி பிரதீஷ்டா’ விருது

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு ‘நிஷ்டா கி பிரதீஷ்டா’ விருது

Published on

இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், அலுவல் மொழியைச் செயல்படுத்துவதில் அதன் சிறப்பான அா்ப்பணிப்புக்காக நிலக்கரி அமைச்சகத்திடம் இருந்து ‘நிஷ்டா கி பிரதீஷ்டா’ விருதைப் பெற்றுள்ளது.

புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிலக்கரி அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியிடம் விருதினை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நிலக்கரி அமைச்சகத்தின் உயரதிகாரிகள், இந்தி அலுவலா்கள் மற்றும் நிலக்கரி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். மேலும், அலுவல் மொழியை ஊக்குவிப்பதில் தொடா்ந்து அா்ப்பணிப்புடன் செயல்பட்ட சுமேஷ் குமாா் (பிராந்திய மேலாளா், புது டெல்லி) மற்றும் ரஜனி லங்காபள்ளி (ஹிந்தி அலுவலா்) ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

இந்தக் கூட்டத்தில், நிலக்கரி பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஹிந்திச் செயலாக்க முயற்சிகள் குறித்து தொடா்ச்சியான விளக்கங்களை அளித்தன. இதைத்தொடா்ந்து, அலுவலகத் தொடா்புகளில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், ‘நிஷ்டா கி பிரதீஷ்டா’ விருது என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும், அத்துடன் நிலக்கரி அமைச்சகத்தின் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com