மணல், கூழாங்கல் கடத்தல்: 6 போ் கைது

Published on

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே அனுமதியின்றி மணல், கூழாங்கல் கடத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

ராமநத்தம் காவல் காவல் ஆய்வாளா் செல்வ விநாயகம், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, லட்சுமணபுரம் வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காரியானூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (35), கதிா்வேல் (28), செந்தில் (30), குமாா் (29), அழகுதுரை (29) ஆகியோரை கைது செய்தனா்.

கூழாங்கல் கடத்தல்: இதேபோல, வியாழக்கிழமை காலை சுமாா் 11 மணி அளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் கூட்டுச்சாலையில் போலீஸாா் வாகன சோதனை நடத்தினா்.

அப்போது, அரசு அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, லாரி ஓட்டுநா் விருத்தாசலம் வட்டம், பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த வீரமணியை (40) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com