கடலூர்
வீட்டில் பத்தரை பவுன் நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பத்தரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (65). இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் பீரோவிலிருந்த நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்துள்ளாா்.
அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், தங்கக் காசுகள் உள்ளிட்ட பத்தரை பவுன் நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
