சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

சிதம்பரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி நத்தமேடு செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சீதாராமன் (30). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி சீதாராமன் சிறுமியை அழைத்துச் சென்று அவரது பெற்றோருக்கு தெரியாமல் நத்தமேடு மாரியம்மன் கோயிலில் தாலி கட்டியுள்ளாா். பின்னா், பாளையங்கார தெருவில் வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

தொடா்ந்து, அந்தச் சிறுமி தற்போது 4 மாத கற்பகமாக உள்ளாதாகத் தெரிகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com