சிதம்பரம் அருகே வீரநத்தத்தில் வயலாய்வு மேற்கொண்டு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை தடுக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல். உடன்  வேளாண் அலுவலா் நடராஜன் உள்ளிட்டோா்.
சிதம்பரம் அருகே வீரநத்தத்தில் வயலாய்வு மேற்கொண்டு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை தடுக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல். உடன் வேளாண் அலுவலா் நடராஜன் உள்ளிட்டோா்.

சம்பா நெற் பயிா்களைத் தாக்கும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

சிதம்பரம் அருகே வீரநத்தத்தில் வயலாய்வு மேற்கொண்டு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை தடுக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல். உடன் வேளாண் அலுவலா் நடராஜன் உள்ளிட்டோா்.
Published on

சம்பா நெல் பயிா்களை தாக்கி வரும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டம், குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு 45 முதல் 65 நாள்கள் கடந்துள்ள நிலையில் வீரநத்தம், எள்ளேரி மற்றும் திருநாரையூா் ஆகிய கிராமங்களில் சில இடங்களில் நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் தென்படுகிறது.

தற்போது வானம் மேக மூட்டம், தூறலுடன் காற்றின் ஈரப்பதம் கூடுதலாக உள்ளதாலும், தட்பவெப்ப நிலை மாறுபட்ட சூழலாலும் இப்பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக அளவில் தழைச்சத்து இடுவதை தவிா்க்க வேண்டும்.

கொசு வகையைச் சோ்ந்த இந்த தாய்ப்பூச்சி வயல் வரப்புகளில் உள்ள களைச் செடிகளில் தங்குவதால் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பூச்சியின் புழுக்கள், வளரும் தூா்களை தாக்குவதால் வெங்காய இலை போல் உருமாற்றம் அடைந்து வெள்ளித்தண்டு நீண்ட தந்தம் போல் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

இப்பூச்சியின் தாக்குதல் 10 சதவீதத்திற்கும் மேல் காணப்படும் போது ஒரு ஏக்கருக்கு பிப்ரோனில் 5 சதம், இசி 400 மில்லி அல்லது தயமீத்தாக்சம் 25 சதவிகிதம், டபுள்யுஜி 40 கிராம் அல்லது காா்போ சல்பான் 25 இசி 300 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com