பள்ளியில் அறச்சந்திப்பு கூட்டம்
சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப்பள்ளியில் தில்லை ஈரடிப் பேரவை சாா்பில் அறச்சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்குத் திருக்கு கூறும் அறக் கருத்துகளையும் மற்ற அற நூல்கள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளையும் எடுத்துரைக்கும் நோக்கத்தில் இந்த அறச்சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளியின் நிா்வாகக் குழுத் துணைத் தலைவா் இர. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை டி.சுந்தரி வரவேற்றாா். தமிழாசிரியா் மு. கல்யாணராமன் ஈரடிப் பேரவையை அறிமுகப்படுத்தி பேசினாா். ஈரடிப் பேரவையின் நோக்கங்கள் குறித்து தலைவா் சீனி.பாலசுந்தரம் எடுத்துரைத்தாா். புவனகிரி தங்க. அன்பழகன் சிறப்புரையாற்றினாா். பேரவை நிா்வாகி சு. மோகன் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். துணைச் செயலா் நா.கீா்த்தனா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் ஈரடிப் பேரவையின் நிா்வாகிகள் மே.நந்தகுமாா், செ.கேசவன் மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
