நெய்வேலியில் இன்று கைவினை பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் கண்காட்சி 2025 வியாழக்கிழமை (அக்.9) தொடங்குகிறது.
Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் கண்காட்சி 2025 வியாழக்கிழமை (அக்.9) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பூம்புகாா் நிறுவனம் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை நெய்வேலி நகரியம், வட்டம் 11 பகுதியில் உள்ள லிக்னைட் அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி வரும் 22-ஆம் தேதி வரையில் நடத்துகிறது.

இந்தக் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை மாலை சுமாா் 6 மணி அளவில் நடைபெறும். தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஞாயிற்றுக்கிழமை உள்பட கண்காட்சி நடைபெறும்.

இதில், பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், ஓவியங்கள், பொம்மைகள், அறைகலன்கள், துணி வகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.

மேலும், விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. விற்பனையில் அனைத்து கடன் அட்டைகளும் சேவைக் கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com