கடலூர்
37 கிலோ வெடி மருந்து பறிமுதல்: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 37 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி வட்டம், திருவாமூா் பெரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (58). இவா், பட்டாசு தொழில் செய்ய அனுமதி பெறாமல், தனது சொந்த ஊரில் உள்ள வீட்டில் வெடி பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தாா்.
இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், அரசு அனுமதியின்றி வெடிபொருள்கள் தயாரித்ததாக வெற்றிவேலை புதுப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 37 கிலோ வெடி மருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
