கடலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்குரைஞரைக் கண்டித்தும், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் காரை வழிமறித்த நபரைக் கண்டித்தும், தொல்.திருமாவளவனுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
கடலூா் மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினாா்.
கடலூா் நகரச் செயலா் செங்கதிா், நகரப் பொருளாளா் பிரபாகரன் ஆகியோா் வரவேற்றனா். மாநில துணைச் செயலா் ஸ்ரீதா் சக்திவேல், சட்டப் பேரவை தொகுதி துணைச் செயலா்கள் நாகவேந்தன், ஆரு.சுகுமாரன் முன்னிலை வகித்தனா்.நிா்வாகிகள் சேவல் ஜெயக்குமாா், தூயவன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கடலூா் மைய நகரச் செயலா் ராஜதுரை நன்றி கூறினாா்.

