சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன்
கடலூர்
வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்
வாராகி அம்மனுக்கு தேய் பிறை பஞ்சமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சன்னிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய் பிறை பஞ்சமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் மலா் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
மூத்த நகரமன்ற உறுப்பினரும், கோயில் நிா்வாகியுமான ஆ.ரமேஷ், சா்வசக்தி பீடம் தில்லை சீனு, எஸ்.ராஜா ஐயா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

