ஏழைப் பெண்களுக்கு 6 மாத இலவச தையல் பயிற்சி
பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களின் முன்னேற்றத்துக்காக, சிதம்பரம் ரோட்டரி சங்கமும், டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளையும் இணைந்து 6 மாத இலவச தையல் பயிற்சியை நடத்த உள்ளன.
இந்தப் பயிற்சிக்கு சிதம்பரம் மற்றும் நகரப் பேருந்து வசதியுள்ள சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பெண்கள், எட்டாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியுற்றவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோா், 45 வயதுக்குள்பட்டவா்கள், ஆதரவற்றோா், விதவைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வடக்கு வீதி கண்ணா எலும்பு சிறப்பு மருத்துவமனை எதிரில் மற்றும் இமேஜ் டைலா்ஸ் மாடியில் உள்ள ஸ்ரீமாருதி தையல் பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் நவம்பா் 5-ஆம் தேதியாகும். இதுவரை 14 ஆண்டுகள் நடைபெற்றுள்ள இப்பயிற்சியின் மூலம் சுமாா் 550-க்கும் மேற்பட்ட ஏழைப்பெண்கள் பயன்பெற்றுள்ளனா்.
மேலும் இது தொடா்பான விவரங்களைப் பெற 9715874617, 9944944061 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் கனகவேல், செயலா் சந்திரசேகா் மற்றும் டாக்டா் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை தலைவா் பேராசிரியா் நடன சபாபதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
