கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் கலந்த குடிநீரைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினா்.
கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் கலந்த குடிநீரைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினா்.

குடிநீரில் கழிவுநீா் கலப்பு: பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை

Published on

கடலூரை அடுத்துள்ள பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செவ்வாய்க்கிழமை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குழாய் மூலம் ஊராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கி வருகிறது.

இந்த ஊராட்சியைச் சோ்ந்த சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவா்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உறவினா்கள் அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்ததும், அந்தக் குடிநீரை குடித்ததால் உடல் உபாதை மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவக் குழுவினா் பள்ளிப்பட்டு ஊராட்சியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும், ஊராட்சிப் பகுதியில் கிருமி நாசினி பொடி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா். குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பை சரி செய்யும் வரை குடிநீா் குழாய் மூலம் வரும் தண்ணீரை யாரும் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, பொதுமக்களுக்கு குடிநீருக்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com