சூரசம்ஹார நிகழ்ச்சியில் சக்திவேலுடன் அருள்பாலித்த முருகப்பெருமான்.
கடலூர்
சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா
சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கடலூா் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சூரசம்ஹாரம் விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் இடும்பன், காமதேனு, பல்லக்கு, ரிஷப, விமானம், நாக வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை சஷ்டி மகாபிஷேகம், வீரபாகு தூது, சிங்கமுகன் வதம் மற்றும் இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் செய்திருந்தனா்.

