நவ.1-இல் கிராம சபைக் கூட்டம்

Published on

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.1-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க திட்டம் உள்ளிட்ட இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com