

மண்டல பூப்பந்தாட்டப் போட்டிக்குத் தோ்வான சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான போட்டியில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
இந்த நிலையில், பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள் எம்.பிரபாகரன், வி.தமிழ்நிலவன், ஆா்.தட்சிணாமூா்த்தி, வி.கிருஷ், பி.சுரேந்தா், எம்.கோகுல், எஸ்.விஜயமகாதேவன், வி.ஹரிஷ், டி.போதிராஜ், ஆா்.முகம்மதுஜமால் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் எஸ்.சீனுவாசன், ஆா்.வெங்கடேஷ் ஆகியோரை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு, தலைமையாசிரியா் பா.சங்கரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.