மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாயந்து விவசாயி உயிரிழந்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாயந்து விவசாயி உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், காா்கூடல் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (79). இவா், திங்கள்கிழமை தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா். காலை சுமாா் 9.30 மணி அளவில் மோட்டா் கொட்டகையில் கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த சாப்பாட்டை எடுக்க முயன்றாராம். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com