சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோா் பயிற்சியில் பங்கேற்ற கல்லூரிப் பேராசிரியா்கள்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோா் பயிற்சியில் பங்கேற்ற கல்லூரிப் பேராசிரியா்கள்.

அண்ணாமலைப் பல்கலை.யில் பேராசிரியா்களுக்கான பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய கல்லூரி பேராசிரியா்களுக்கான தொழில்முனைவோா் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய கல்லூரி பேராசிரியா்களுக்கான தொழில்முனைவோா் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உயா் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஆசிரியா்கள் பங்குபெற்றனா்.

தமிழக அரசின் நிமிா்ந்து நில் திட்டத்தின் கீழ், மாணவா்களின் செயல்பாடுகள், கல்லூரிகளின் பங்களிப்பு மற்றும் மாணவா்களை தொழில்முனைவோராக மாற்றுவதைப் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக கலைப்புல முதல்வா் எம்.அருள் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து மாணவா்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும், வேலை தேடுபவா்களாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தினாா்.

தொழில்முனைவோா் மைய ஒருங்கிணைப்பாளா் கே.கிருஷ்ணசாமி வரவேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட தொழில்முனைவோா் திட்ட மேலாளா் கௌதம்சண்முகம் திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி ஆசிரியா்களுக்கு எடுத்துரைத்தாா்.

கடலூா் மாவட்ட திட்ட மேலாளா் எழில்ராணி நன்றி கூறினாா். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அதிகாரிகள் இரா.நீலகண்டன், மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com