சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி.
கடலூர்
பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிதம்பரம் ரயில்வே பீடா் ரோட்டில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரயில்வே போலீஸாா் சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போஸ்கோ சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கண்ணகி முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் பாா்த்தீபராஜ் பங்கேற்று விழிப்புணா்வு உரையாற்றினாா்.
மேலும், ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டால், 1098-க்கு தகவல் தெரிவிக்கும்படி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோன்று, ரயில்வே நிலைய நடைமேடையில் பெண்களுக்கு ரயில்வே போலீஸாா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.