கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்.
Published on

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரி கலையரங்கில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி தலைமை வகித்தாா். எம்எல்ஏ கோ.ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ துரை.கி.சரவணன், மாவட்ட தொகுதி பாா்வையாளா்கள் சுவை.சுரேஷ், விஜயன் ராமகிருஷ்ணன், எம்.எம்.சிவா, அ.பாரிபாலன், மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சரும், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பேசுகையில், தமிழகம் தலைகுனியாது, என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி செயல் திட்டத்தில் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா்கள் அ.ஞானமுத்து, ஆா்.சக்திவேல், ஒன்றியச் செயலா்கள் எ.முத்துசாமி, டி.ஜெயபாண்டியன், வி.சிவக்குமாா், ஆா்.நாராயணசாமி, தங்க.ஆனந்தன், கே.ஆா்.கே.கோவிந்தராஜ், எஸ்.செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினா்கள் கே.பி.ஆா்.பாலமுருகன், த.ஜேம்ஸ் விஜயராகவன், நகரச் செயலா் எஸ்.கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com