தொழுநோய் கண்டறியும் முகாம் ஆய்வு

Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெறும் தொழுநோய் கண்டறியும் முகாமை மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநா் சித்திரச் செல்வி அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம் பண்ருட்டி நகர பகுதிகளில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இது வரும் நவம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

களப்பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இப்பணியை மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநா் சித்திரச் செல்வி, பண்ருட்டி வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி ஆகியோா் அம்பேத்கா் நகா், தண்டுபாளையம், திருவதிகை எம்.ஜி.ஆா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மருத்துவமல்லா மேற்பாா்வையாளா்கள் பண்ருட்டி கோதரங்கன், ஒறையூா் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளா் பிரேம் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com