சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

Published on

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் பகுதியில் வசித்து வந்தவா் விஜயசங்கா் மனைவி ராஜஸ்ரீ(33). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா்.

கடலூரில் உள்ள மருத்துவமனையில் காண்பிப்பதற்காக உறவினா்கள் ராஜஸ்ரீஆட்டோவில் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.

ஆட்டோவை சகோதரா் ராஜா(42) ஓட்டிச் சென்றாா். குடிதாங்கிசாவடி அருகே சென்ற ஆட்டோ மீது, எதிா் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் ராஜஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com