ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சட்ட விரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாக 2 பேரை விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாக 2 பேரை விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 32 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் பெண்ணாடம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோழன் நகா் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா், மதுபானங்களை விற்பனை செய்ததாக பெண்ணாடத்தைச் சோ்ந்த சிற்றரசன் (22), பாண்டியன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 32 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.