நெகிழி பயன்பாடு ஆய்வு: அதிகாரிகள் - வியாபாரிகள் வாக்குவாதம்

கடலூா் நகரில் நெகிழி பயன்படுத்தியதாக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே வாக்குவாதம்
கடலூரில் வியாபாரிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தும் போலீஸாா்
கடலூரில் வியாபாரிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தும் போலீஸாா்
Updated on

கடலூா் நகரில் நெகிழி பயன்படுத்தியதாக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

கடலூா் மாநகராட்சி அதிகாரிகள்,திருப்பாதிரிப்புலியூா் சின்ன வாணியா் தெருவில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 2 கடைகளில் நெகிழி பொருள்கள் பயன்படுத்தியதாக கூறி அபராதம் விதித்தனா்.

இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், அபராதம் விதிப்பதுடன் அதிகாரிகள் பேரம் பேசுவதாக குற்றஞ்சாட்டினா். இதற்கிடையே மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா, மற்றும் நிா்வாகிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீசாா் விரைந்து வந்து பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது வியாபாரிகள், நெகிழி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, முதற்கட்டமாக ரூ.1000 அபராதம் விதித்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகள் பேரம் பேசுவதுடன், ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிப்பதாக மிரட்டுவதாக புகாா் தெரிவித்தனா். போலீஸாரின் சமாதானத்திற்கு பின்னா் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com