கோயில் இடத்திற்கு தரை வாடகை வசூலிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

கோயில் இடத்தில் குடியிருக்கும் மக்களிடம் தரை வாடகை வசூல் செய்யக்கோரி, கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்
காத்திருப்புப் போராட்டம் நடத்திய  மாா்க்சிஸ்ட்  கட்சியினா்
காத்திருப்புப் போராட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்
Updated on

கோயில் இடத்தில் குடியிருக்கும் மக்களிடம் தரை வாடகை வசூல் செய்யக்கோரி, கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

பரங்கிப்பேட்டை, சந்தை தோப்பு பகுதி முத்துக்குமாரசாமி கோயில் இடத்தில் 30 ஆண்டுகளாக பலா் வசித்து வருகின்றனா். இங்கு இணை ஆணையரால் முறையாக விசாரணை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 1.1.1998 முதல் 31.8.2024 வரை வசித்த 26 குடும்பங்களுக்கு தரை வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தரை வாடகை வசூல் செய்யாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருவதைக் கண்டித்தும், கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள மாவட்ட அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

இதற்கு 14-ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com