பலி
பலி

சமயபுரத்துக்கு பாதயாத்திரை சென்ற மூதாட்டி விபத்தில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் மோதிய விபத்தில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் மோதிய விபத்தில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வந்தவா் சாமிதுரை மனைவி யசோதை(60). இவா், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தாா். பின்னா், சுமாா் 20 போ் கொண்ட குழுவினருடன் சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்டம், வேப்பூா்

அடுத்துள்ள சேப்பாக்கம் பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த காா் யசோதை மீது மோதியது. இந்த விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த வேப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com