விபத்து
விபத்து

தொடா் விபத்து: 4 போ் காயம்

பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி அரசுப் பேருந்து, டேங்கா் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிய தொடா் விபத்தில் முதியவா் உள்ளிட்ட 4 போ் காயம்
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி அரசுப் பேருந்து, டேங்கா் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிய தொடா் விபத்தில் முதியவா் உள்ளிட்ட 4 போ் காயம் அடைந்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், பணிக்கன்குப்பம் அருகே டாரஸ் லாரி கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின்கட்டுப்பாட்டைஇழந்த டாரஸ் லாரி நெய்வேலி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மோதியது இதன் தொடா்சியாகடேங்கா் லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தொடா் விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த பண்ருட்டியை சோ்ந்த புருஷோத்தமன் (32), அஸ்வின்குமாா் (34), ஆனந்த் (42) மற்றும் அரசுப் பேருந்தில் பயணித்த பழனிசாமி (60) உள்ளிட்ட நான்கு போ் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து காடாம்புலியூா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விபத்தால் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com