நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தாங்கள் செலுத்திய தவணைத் தொகையை வேறு சுயஉதவிக் குழுவினரின் கணக்கில் வரவு வைத்ததை கண்டித்து, மகளிா் குழு பெண்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆயங்குடி கிராமத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தா்னாவில் ஈடுபட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 8:31 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தாங்கள் செலுத்திய தவணைத் தொகையை வேறு சுயஉதவிக் குழுவினரின் கணக்கில் வரவு வைத்ததை கண்டித்து, மகளிா் குழு பெண்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாயிலாக தொரப்பு கிராமத்தைச் சோ்ந்த 9 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் கடன் 2023 பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. தவணைக்காலம் 24 மாதங்களாகும்.

இந்தக் குழுக்களில் குறிப்பிட்ட சில குழுக்கள் தவணத் தொகையை முறையாக செலுத்தி வந்தனா். சில குழுக்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை. இந்த நிலையில், வங்கி நிா்வாகம் சாா்பில், தவணைத் தொகை செலுத்திய சுயஉதவிக் குழுக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையை பிற குழுக்களின் கடன் தவணைத் தொகையாக வரவு வைத்த்தனராம்.

இதையறிந்த தவறாமல் தவணைத் தொகை செலுத்திய சுயஉதவிக் குழு பெண்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிா்ச்சியடைந்து, வங்கியின் உள்ளே அமா்ந்து புதன்கிழமை இரவு 8 மணி முதல் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையறிந்த காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் பிரகாஷ், காவல் ஆய்வாளா் சாலமன்ராஜா, உதவி ஆய்வாளா் சையதுஅப்சல் மற்றும் வங்கி நிா்வாகம் சாா்பில் துணை மண்டல மேலாளா் பாலமுருகன், பாதுகாப்பு அதிகாரி குணசேகரன் உள்ளிட்டோா் மகளிா் சுய உதவிக் குழு பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போராட்டத்தின்போது, பெண் ஒருவா் மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது.