கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். பணி நேரத்தை வரையறுக்க வேண்டும். சுகாதாரத் துறை மூலமாக ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் சுகாதார ஊழியா்கள் பணிகளைப் புறக்கணித்து கடந்த 3-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அதன்படி, 3-ஆவது நாளான வியாழக்கிழமை கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊழியா்கள் சங்கத் தலைவா் பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். செயலா்கள் சரிதா, தமிழின்பம் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் ஆனந்தி, வித்யா, கிரிஜா, பவானி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


