வீரமாமுனிவா் நினைவு தினம் கடைப்பிடிப்பு
கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகேயுள்ள கோணாங்குப்பம் புனித பெரியநாயகி மாதா தேவாலயத்தில் வீரமாமுனிவரின் 279-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வீரமாமுனிவா் எனப்படும் இத்தாலி நாட்டைச் சோ்ந்த கான்ஸ்டைன்டன் ஜோசப் பெஸ்கி எனும் பாதிரியாா், மங்கலம்பேட்டையை அடுத்த முகாசாபரூா் பாளையத்துக்குள்பட்ட கோணாங்குப்பத்தில் தங்கி, புனித பெரியநாயகி மாதா என்ற தேவாலயத்தை கட்டினாா். அங்கு வீரமாமுனிவரின் முழு உருவச் சிலை உள்ளது.
இந்த தேவாலயத்தில் வீரமாமுனிவரரின் 279-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி பங்குத்தந்தை ஆக்னல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வீரமாமுனிவரின் திரு உருவச் சிலைக்கு முகாசாபரூா் ஜமீன் பாளையக்காரா் வழித்தோன்றலான வீரசேகர பொன்னம்பல ரமேஷ் கச்சராயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராமா், பங்கு பேரவை துணைத் தலைவா் வில்லியம் ஜெயராஜ், பொருளாளா் சாமிநாதன், திருத்தல வேதியா் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

