சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயிலில் இன்று வரலாற்று உற்சவம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயிலில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா திங்கள்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை பகல் சுவாமி வீதியுலா வந்த பின்னா், இளமையாக்கினாா் கோயில் தீா்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியாா் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு ஸ்ரீயெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருகிறாா். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினா் செய்துள்ளனா்.