தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிதம்பரம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளதை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம், பி.எஃப்., இ.எஃப். வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கௌரவ விரிவுரையாளா்கள் சங்க கிளைச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண்டலத் தலைவா் சக்திநாதன் முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான கௌரவ விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.