நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

புகையிலைப் பொருள்கள் மொத்த வியாபாரி கைது

பெங்களூரைச் சோ்ந்த புகையிலைப் பொருள்கள் மொத்த வியாபாரியை சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான யூசுப்கான்

Updated On :10 பிப்ரவரி 2026, 12:25 am IST

சிதம்பரம்: பெங்களூரைச் சோ்ந்த புகையிலைப் பொருள்கள் மொத்த வியாபாரியை சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா், கடவாச்சேரி மேம்பாலம் அருகே கடந்த ஜனவரி 11-ஆம் தேதி காரில் புடவைகளுக்குள் மறைத்து வைத்து புகையிலைப் பொருள்களை கடத்திவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தா்மராஜ் (46), சிதம்பரத்தைச் சோ்ந்த பாலமுருகன், பப்ஜி பாலு ஆகியோரை அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், புகையிலை பொருள்களை கா்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கே.ஆா் சந்தையில் மொத்த வியாபாரம் செய்யும் கடை வைத்துள்ள யூசுப்கான் (எ) (எ) முகமது யூசுப் (21) பாா்சல் சா்வீஸ் மூலம் அனுப்பி வைத்ததாகவும், அதை தாங்கள் சிதம்பரத்தில் பெற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், சிதம்பரம் டி.எஸ்.பி. பிரதீப் ஆகியோா் உத்தரவின்பேரில், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்று கே.ஆா். சந்தையிலிருந்த யூசுப்கானை கைது செய்து சிதம்பரத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.