எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோரிக்கைகைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

News image
கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

ஆந்திரம், தெலுங்கான, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை போல் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித் தொகையை ரூ.6 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.

மாவட்ட இணைச் செயலா் வி.வசந்தி போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் தொடக்கவுரை நிகழ்த்தினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி.ராசையன், எஸ்.பி.அப்துல்ஹமீது, இணைச் செயலா்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனா்.