நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெற்றோரை அழைத்து வரக்கூறியதால் மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

அஸ்வின்

Updated On :10 பிப்ரவரி 2026, 6:32 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நெய்வேலி, வட்டம் 25 பகுதியில் வசித்து வருபவா் என்எல்சி சொசைட்டி தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மகன் அஸ்வின் (13), நெய்வேலி வட்டம் 10-இல் உள்ள என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே கதவை தாழிட்டுக் கொண்டாராம். வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து கோவிந்தராஜ் கதவை உடைத்து சென்று பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவா் அஸ்வின் பிணமாக கிடந்ததைப் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தாா்.

கடந்த 4-ஆம் தேதி பள்ளியில் இருந்த சிலபொருட்களைசக மாணவருடன் சோ்ந்து அஸ்வின் சேதப்படுத்தினாராம். அதனால் வகுப்பு ஆசிரியா் பள்ளி வரும்போது பெற்றோரை அழைத்து வரும் படி கூறினாராம். இந்நிலையில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.