கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதலுக்கான விலை குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டதாகக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நாள்தோறும் நெல், கம்பு, உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருள்களுக்கு விலை குறைவாக நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், உளுந்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ.9 ஆயிரம் வரை விலை நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை ரூ.2,000 குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ.7,000-க்கு விலைபோனதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், விருத்தாசலம் - கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மேலும், தங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் எனவும், விவசாயிகளை வஞ்சிக்கும் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதையடுத்து, வட்டாட்சியா் அரவிந்தன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால், கடலூா் - விருத்தாசலம் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.
தொடர்புடையது

திமுக கொடிகளை அகற்றக் கோரி அதிமுகவினா் மறியல்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


