திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

Published on

தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசு, அதற்கு துணைபோகும் அதிமுகவைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

காங்கிரஸ் கட்சி கேட் மணி, முருகன், திராவிடா் கழகம் காமராஜ், மாா்க்சிஸ்ட் கட்சி தேவராஜூலு, உதயகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குணசேகரன், சக்திவேல், விசிக காா்த்தி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடாம்புலியூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன், அவைத் தலைவா் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினா் க.அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேப்பூா் கூட்டுச்சாலையில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு நல்லூா் வடக்கு ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட உறுப்பினா் சக்தி விநாயகம், ஒன்றியப் பொருளாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில்...: சிதம்பரம் காந்தி சிலை அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் அப்பு சந்திரசேகரன், விசிக மாவட்டச் செயலா் தமிழ்வாணன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் பூ.சி.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், திமுக நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியம், ஆா்.இளங்கோவன், மாவட்டப் பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா்.மக்கின், பொதுக்குழு உறுப்பினா் ராதா மற்றும் முஸ்லிம் லீக், மூவேந்தா் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, கட்டுமானத் தொழிலாளா் சங்கம் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com