கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தாமிரக் கம்பி திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம் 16 பகுதியில் உள்ள லிக்னைட் ஹவுஸில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றுபவா் செல்வகணபதி (56). இவா், லிக்னைட் ஹவுஸில் தாமிரக் கம்பி திருடுபோவதாக நெய்வேலி நகரிய போலீஸாரிடம் புகாரளித்தாா்.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் தலைமையில் போலீஸாா் இந்திரா நகா், எம்.ஆா்.கே. சாலை பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டி அருகே சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த கொள்ளிருப்பு பகுதியைச் சோ்ந்த சரண்குமாரை (27) அழைத்து விசாரணை நடத்தினா். இதில், அவா் லிக்னைட் ஹவுஸில் தாமிரக் கம்பிகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சிறையிலடைந்தனா். மேலும், அவரிடமிருந்த 20 கிலோ தாமிரக் கம்பி, ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

