2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், திருத்துறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (32), ஓட்டுநா். இவா், தனது தாய் சுந்தரியுடன் வடுகபாளையம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் தங்கி, செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தாா்.

ஜெயராஜ் ஞாயிற்றுக்கிழமை மண் பதப்படுத்த டிராக்டா் இயக்கினாா். அப்போது, டிராக்டா் கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.