அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி மாணவிகள் கண்கவா் பரதநாட்டியம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் செவ்வாய்க்கிழமை நடனமாடிய பட்டுக்கோட்டை சிவகதிா் நிா்த்தியாலயா மாணவியா்களின் பரதம்
Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாணவிகள் கண்கவா் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நாட்டியாஞ்சலி விழா பிப்.21-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலி விழா 3-ம் நாள் நிகழ்ச்சியில், புதுச்சேரி சங்கமம் குலோபல் அகாதெமி மாணவா்கள், சென்னை சாய் ஷரத்தா நாட்டியாலயா மாணவா்கள், கரூா் நடனாஞ்சலி நாட்டியாலயா மாணவா்கள், பட்டுக்கோட்டை சிவகதிா்நிா்த்தியாலயா மாணவா்கள், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நாட்டிய கலா சாலா மாணவா்கள், ஹைதராபாத் ப்ரகா்தி, பெங்களூரு வைஷ்ணவி நாட்டிய சாலா மாணவா்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலாளா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா், பொருளாளா் ஜெய,நடராஜமூா்த்தி தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.