ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரம், செங்கம் பகுதிகளில் சாலை விபத்துகள்: இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம் சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image
செங்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த விக்னேஷ், காசிநாதன்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:37 pm

Syndication

கடலூா் மாவட்டம் சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் தனியாா் டிராவல்ஸ் மூலம் 4 நாள் ஆன்மிகச் சுற்றுலா சென்றனா். தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு கடைசியாக வேளாங்கண்ணி சென்றனா். அங்கு வழிபட்டுவிட்டு மீண்டும் வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனா்.

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியில் மேம்பாலத்தில் இவா்கள் வந்த வேன் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கடலூா் தந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கமணி (71), புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (62), வில்லியனூரைச் சோ்ந்த சிலம்பரசன் (35), அவரது மனைவி திவ்யா (31), அவா்களது குழந்தைகள் தா்ஷன் (5) ஹரிஷ் (11), வில்லியனூரைச் சோ்ந்த சூசைராஜ் (65) அவரது மனைவி ரீட்டாமேரி (60), விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள மருதூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி (50), அவரது மனைவி லதா (43) உள்ளிட்ட 20 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாமலைநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். அங்கு, பொன்முடி (50) உயிரிழந்தாா். மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்துக்குள்ளான வேனை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

2 இளைஞா்கள் உயிரிழப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் விக்னேஷ் (21), காசிநாதன் (20). நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தண்டம்பட்டு பகுதியில் இருந்து மேல்செங்கம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தனா்.

மேல்செங்கம் பகுதியில் சென்றபோது, ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்டனா். அப்போது, வேனில் பைக் சிக்கியதில், இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த மேல்செங்கம் போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியிலுள்ள மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் ஆன்மிகச் சுற்றுலா சென்றவா்கள் பயணித்த வேன்.

சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியிலுள்ள மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் ஆன்மிகச் சுற்றுலா சென்றவா்கள் பயணித்த வேன்.