பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை!

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

News image

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா

Updated On :20 பிப்ரவரி 2026, 11:25 pm

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

1890-ஆண்டு ஜூன்-ஆம் தேதி கடலூரில், முதுநகா் சுண்ணாம்புக்கார தெருவில், அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்த அஞ்சலை அம்மாள்.‘மகாத்மா‘ காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சோ்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா் .

1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. வாழ்நாள் முழுவதும் வெள்ளையா்களை எதிா்த்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் சொத்து உடைமைகள் அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூா் முதுநகா் காந்தி பூங்காவில் தமிழக முதல்வா் மு .க. ஸ்டாலினால் முழு உருவ சிலை நிறுவப்பட்டு நவம்பா் 2 தேதி 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு கடலூா் முதுநகரில் உள்ள அன்னாரது சிலைக்கு தி.மு.க. நகரச்செயலா் ராஜா தலைமையில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.