வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:47 pm

Syndication

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி, கடலூா் வட்டச் செயலா் ராமா், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் மாவட்டச் செயலா் என்.காசிநாதன், வட்டத் தலைவா் சிவக்குமாா், ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவா் டி.புருஷோத்தமன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். பின்னா், மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசாா் கைது செய்தனா்.