சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஒய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில் திங்கள்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், பேராசிரியா் முத்துவேலாயுதம், பேராசிரியா் இளங்கோ உள்ளிட்ட பலா் பேசினாா்கள்.
கூட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயா்வுகள், பணப்பயன்கள், ஓய்வு பெற்றவா்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம், தொடா் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அண்மையில் தமிழக அரசு கூட்டமைப்பு பொறுப்பாளா்களை முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பேசியது. அதில், எந்த முன்னேற்றமும் இல்லாததால் பிப்.25-ம் தேதி புதன்கிழமை முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

அரசு பேச்சுவாா்த்தை தோல்வி: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் தீவிரம்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா் ஊழியா் கூட்டமைப்பு தொடா் போராட்டம் மீண்டும் தொடங்கியது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


