சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பிப்.27-இல் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலூா் மாவட்டம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:22 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2026 பிப்ரவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.27)

காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சாா்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயா் ஆகியவற்றை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.